Tuesday, April 19, 2011

புனிதமானது...





உலகத்திலேயே மோசமானது உன்னால் யாராவது கண்ணீர் சிந்துவது!உலகத்திலேயே ரொம்ப புனிதமானது உனக்காக யாராவது கண்ணீர் சிந்துவது!!


~~~~~~~~~~


தண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய்!ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே!!


~~~~~~~~~~


உன்னை பலவீனப்படுத்தும் எந்த ஒரு விடயதிலிருன்தும்விலகியே இரு!!


~~~~~~~~~~


உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலைப்படாதே! நீ அவர்களுக்கு இரண்டு அடிக்கு முன்னால் இருக்கிறாய் என்று பெருமைப்படு!!


~~~~~~~~~~


தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!


~~~~~~~~~~


நீங்கள் இந்தப் பூமியில் பிறந்ததன் அர்த்தம் பூர்த்தியாக வேண்டுமென்றால், அடுத்தவருக்கு உதவி செய்ய முடியாவிட்டால் கூட பரவாயில்லை! யாரையும் புண்படுத்திவிடாதீர்கள்....!!


~~~~~~~~~~


தோல்விகளை நேசிக்கத் தெரிந்துகொள்!வெற்றியின் இரகசியம் உனக்கு புரியும் !!


~~~~~~~~~~


உலகில் வாழ வேண்டும். சாகும் வரை அல்ல.நம்மை வெறுத்தவர்கள் நம்மை வாழ்த்தும் வரை...!!!


~~~~~~~~~~


வெற்றி என்பது உன்நிழல் போல,நீ அதை தேடி போகவேண்டியதில்லை,நீ வெளிச்சத்தை நோக்கிநடக்கும் போது தானேஉன்னுடன் வரும்...


~~~~~~~~~~


Thursday, April 7, 2011

ஏய் ஓவியப் பெண்ணே !!!!

மனதில் நிறைந்த உருவம் இங்கு உயிரில்லா ஓவியமாய்...என்னில் நிறைந்த காதல் உயிர் கொண்ட காவியமாய் ...... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஏய் ஓவியப் பெண்ணே !நீ என் கரம் பிடித்து காவியம் ஆவது எப்போதுபதில் தெரிந்தால் சொல்லடி உனக்கான என் தேடலை ...... நான் முடித்து கொள்கிறேன் ..... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Sunday, March 27, 2011

பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை !!!




ஒரு பெண் தனது மனதிற்குள் எதைத்தான் பூட்டி வைத்திருக்கிறாள்? என்று ஆய்வு செய்தார், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ என்பவர். தனது ஆய்வின் முடிவில், பெண்கள் உண்மையிலேயே விரும்புபவை எவை? என்பதை ஒரு பட்டியலே வெளியிட்டார். அதில் இடம்பிடித்த முக்கிய விஷயங்கள் எவை என பார்த்தால்,... ...


* `கீ' கொடுத்த பொம்மை மாதிரி எடுத்ததற்கெல்லாம் ஆட்டம் போடுபவளாக பெண்ணை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், அதிகம் பேசாதே... என்று கட்டுப்படுத்தவும் கூடாது.


* தான் விரும்புகிறவன், சிறந்த ஆண் மகனாக, எல்லோராலும் பாராட்டப்படக் கூடியவனாக இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களுமே பேராசைப்படுகிறார்கள். அதிலும், தனித்திறன் பெற்ற ஆண்களை பெண்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.


* காலையில் வேலைக்கு புறப்படும் ஆண், `அந்த பொருள் எங்கே? இது எங்கே?' என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. அதேநேரம், பொறுப்பாக கேள்விகள் கேட்டால், அதற்குரிய செயலை பொறுப்பாக செய்ய எல்லா பெண்களும் தயாராகவே இருக்கிறார்களாம்.


* விடுமுறை நாட்களில் தங்கள் விருப்பம்போல் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பெண்களின் பேராசை என்றுகூட சொல்லலாம். அன்றையதினம், `இன்று ஏதாவது விசேஷமாக செய்யலாமே...' என்று வற்புறுத்தக்கூடாது.


* எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான் எல்லாப் பெண்களுக்கும் பிடிக்கும். அவசரம் அவசரமாக அதைச் செய்வதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை.


* திடீரென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்கு காரணமாக மனைவியை குற்றம் சொல்லக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக்குமே உண்டு.


* எந்தவொரு முடிவை கணவன் எடுத்தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறந்தள்ளக் கூடாது.


* ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.


* படுக்கையறையில் போர் அடிக்கும் விதமாக கணவன் செயல்படக்கூடாது. எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் புதுமையாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.


* அதிகம் பேசுவதில் பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், செல்போனில் அவர்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. `அய்யோ... பில் அதிகமாகி விடும்' என்று சொன்னால் அவர்கள் எரிச்சல் ஆகிவிடுவார்கள். அதனால், அவர்களை மனம்போல் பேச விட்டுவிட வேண்டும்.


* வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்டமாட்டாள். வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பார்க், பீச், ஓட்டல், தியேட்டருக்கோ, வருடத்திற்கு ஒருமுறையாவது வெளியூர் சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும்.


* கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள்.


* இப்போதெல்லாம் இடுப்பு சிறுத்த பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகிறார்கள். சிலநேரங்களில் எதிர்பாராதவிதமாக பெண்களது உடம்பு பெருத்துவிட்டால், அதற்காக அவர்களை இன்னும் வருத்தத்திற்குள்ளாக்கக் கூடாது. இடை குறைக்கும் முயற்சிக்கு கணவர் தரப்பில் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள். - இப்படி பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றினாலே போதும். அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும் என்கிறார், ஆய்வாளர் பேகோ.