Saturday, June 19, 2010

காதல் கவிதை !!!



என் காதல் கவிதைக்கு,
"
கருவாக" அவளை தேர்வுசெய்தேன் ,
ஆனால் , அவளோ ,அதற்கு ,நன்றிகடனாக , அவளின், தாய்மைக்கு "கருவாக" என்னை தேர்வு செய்தாள்...

யார் மிருகம் ? யார் கடவுள் ? என் கவிதை ..

நீ என்னை அவமான படுத்தினாலும் ,
உன் மேலும் நான் அன்பாய் இருப்பேன் ..
நீ என்னை மட்டம் தட்டினாலும் ,
உனக்கும் ,நான் மரியாதை கொடுப்பேன் ...

நீ என்னை கேலி செய்தாலும் ,
உன்னையும் நான் நேசிப்பேன் ..
நீ என்னை தரக்குறைவாக நினைத்தாலும் ,
உன்னையும் நான் ,யாரிடத்தும் உன்னை தரம்தாள்த்தமாட்டேன்..
நீ என்னை ஏமாற்ற நினைத்தாலும் ,
உனக்கும் நான் உண்மை உள்ளவனாக இருப்பேன் ..
நீ எனக்கு எதிராக சூழ்சிகள் செய்தாலும் ,
உனக்கும், நான் பாசகரம் நீட்டுவேன் ..
இவை அனைத்தையும் செய்வதால் ,வாழும் காலத்தில் நீ மிருகமாய் வாழ்ந்து கொண்டிருப்பாய்,
நான் உன்னையும் மன்னித்து கடவுளாய் வாழுந்து கொண்டிருப்பேன் ..

இலங்கை தமிழன் -என் கவிதை



என் சோகம் , அதை மறைக்க முடியவில்லை ,
என் பிரிவு ,அதை தடுக்க முடியவில்லை ,
என் அழுகை , அதை அடக்க முடியவில்லை ,
என் வேதனை , அதை யாரும் புரிந்து கொள்ளவில்லை
என் சுதந்திரம், அதை சுவாசிக்க முடியவில்லை ,
என் இல்லம் ,அதில் வாழ முடியவில்லை ,
என் வயல் , அதில் அறுவடை செய்யமுடியவில்லை ,
என் மக்களின் பிணங்கள் , அது அழுகுவதை, எரிக்க முடியவில்லை,
என் முள் வேலி ,அதை உடைத்தெறிய முடியவில்லை ,
என் பசி , அதை ருசித்து உன்ன முடியவில்லை,
என் ஆடை , அவற்றின் கிழிசலை தைக்க முடியவில்லை,
என் அடிமைவிலங்கு , அதை விலக்கி கொள்ள முடியவில்லை,
என் வேண்டுகோள் , அதை கேட்பதற்கு உலகத்தில் காதுகள் இல்லை,
என் இன பெண்களின் கற்பு , அதற்க்கு உத்திரவாதம் இல்லை ,
இப்படிக்கு ,
இலங்கை தமிழன்

என் சிந்தனை துளிகள்...



நீ ஒருவனுக்கு தீங்கு செய்ய நினைத்தால் , இன்னொருவன் உனக்கு தீங்கு செய்ய காத்திருக்கிறான் ...
நீ ஒருவனுக்கு உதவ நினைத்தால் , இன்னொருவன் உனக்கு உதவ காத்திருக்கிறான் .....
இந்த உலகம் உன்னை ரசிக்கும் நீ அழும்போது ,
இந்த உலகம் உன்னை வெறுக்கும் நீ சிரிக்கும் போது ,
இந்த உலகம் உன்னை நேசிக்கும் நீ உதவும் போது...


Monday, June 14, 2010

வாழ்வில் வெற்றீ பெற - சிந்தனைத்துளிகள்



உன் கடந்த கால சிறு வெற்றி ஒன்று இருக்கும் ,
அதை முயற்சி செய்து பார் ...
கடின உழைப்பு மட்டும் வெற்றி தராது ,
நடிகனை விட , விவசாயின் உழைப்பு அதிகம் ,
ஆனால், யாருக்கு ஊதியம் அதிகம் என்று எண்ணிப்பார்..
மற்றவர்கள் சொல்லும் துறையை தேர்த்துஏடுபதை விட ,
நீ நேசிக்கும் துறை யை ,
தேர்வுசெய் ...
முயற்சி செய்தால் வானமும் உனக்கு கீழே ,
என்ற வாதம் ஒத்து வராது ,
நூறு கோடி மக்களும் ,முயற்சி செய்தால், அம்பானியாக ,மாறமுடியுமா ?,

உன் நண்பர்களை நாடு ,
எவனோ ஒருவன் உனக்கு உதவ காத்திருப்பான் ..
எல்லோர் திறமையும் ,
முடங்கி போக ,
பொருளாதாரமும் ,வறுமைதான் ,
அதை துடைத்து ஏறிய முயற்சி செய் ..

உன் முதல் தோல்வியில் மனம் நோகும் ,
இரண்டாம் தோல்வியில் மனம் உடையும் ,
மூன்றாம் தோல்வியில் மனம் கலங்கும் ,
நான்காம் தோல்வியில் மனம் சுக்குநூறாகும் ,
உன் வெற்றிக்கான தேர்தெடுத்த பாதையை தவறு என்று சுட்டி காட்டுகின்றன அந்த தோல்விகள் ..
தோல்விதான் வெற்றிக்கு முதல் படி ,
என்ற வாதம் தவறானது ,
ஏழை ,இன்று வரை முயற்சிதான் செய்கிறான் ,
ஆயிரத்தில் ஒருவன்தான் வெற்றியும் பெறுகிறான் ..
மறந்துவிடாதே ,இந்த உலகம் ,நீ எது செய்தாலும் , குறை சொல்லத்தான் ,
நிறை சொல்ல அல்ல ...
பிறரிடம் ஆலோசனைகளை கேளுங்கள் ,
அதிகமாக கேட்காதிர்கள் , அவர்களும் உங்களை குழப்பலாம் ..
எது உனக்கு தெரியாது என்று உன்னை பார்த்து ,
ஏளனம் செய்கிறானோ , அதையே நாம் தேர்வு செய்துதான் பார்போமே ?
நம்மை மற்றவர்களோடு ஒப்பிடுவதை விட ,
நம்மை நாமே நேசிப்போம் ...
யென்னவென்டும் ஒவொருவரும் ,
எனக்கு கிடைக்காதது ,
என் மகனுகாவது கிடைக்கவேன்டும் என்ரு ................
ஒருவன் வாழ்கையில் வெற்றீ பெர குடும்ப சுழலும் ஒரு காரனம் ,
சன்டையிடம் பெற்ரோர் ,
குடிகார தகப்பன் ,
கடனில் வீடு ,
கடைசியாக, நல்ல மனம் , எல்லொரிடதும் அன்பு கொன்டால் போதும் ...

ஹைக்கூ கவிதைகள்...

உள்ளேயே இருந்தால் சோம்பல்,
வெளியேறினால் உழைப்பு ,
தொழிலாளியின் வியர்வை........


வெள்ளை காகிதத்தில் ,
கருப்பு புள்ளி ,
புது வீட்டில் திருஷ்டி பொம்மை .....


உயிர் உண்டு , உறுப்புகள் இல்லை,
உறுப்புகள் உண்டு , உயிர் இல்லை ,
இலங்கை தமிழன் ....


தவணை முறையில் ,
புற்று நோய் வாங்கினேன் ,
கடன் தொல்லை ...


கிழியாமல் நெய்தான் ,
கிழிந்த ஆடையோடு ,
நெசவாளி .....



என் இதயத்திற்குள் ,
வானொலி பெட்டி ,
ஒலித்தது, அவள் பெயர் அலைவரிசையாய்............


அன்று ,மகனை அறிமுகபடுத்தியவள் ,
இன்று ,அறிமுகம் இல்லாதோரோடு,
முதியோர் இல்லம் ...