Sunday, January 30, 2011




1) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு
இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா

2) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..

3) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?


4) சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க..
நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு
மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர்
சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது
பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?

5) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது
தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று
படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர்
படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”

Tuesday, January 25, 2011

ஐயோ பையன் இப்படிதான் இருக்கணும்..,



நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு

இருக்கிற பையனை போட்டு

இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,

Exam-
க்கு கூட போகாம

ஒக்காந்து படிச்சிகிட்டே

இருக்கான்..!!!
------------------------------------------------

( இண்டெர்வியூ.. )

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா " கோவா "

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *


(
புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா

வாங்க கடைக்குச் போறான். )

கடைக்காரர் : சார் உங்களுக்கு

கல்யாணம் ஆயிடுச்சா...?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல

எங்க அம்மாவா என்னை பீட்ஸா

வாங்க அனுப்புவாங்க...!??

அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா...

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *

நடிகர் விஜய் : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு

மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு

இருக்கேன்..

நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே

அது மக்களுக்கு பண்ற பொதுசேவை

தானே சார்..!!

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *

(
ஹோட்டலில் )

"
ஒரு காபி எவ்ளோ..? "

"
அஞ்சு ரூபா.. "

"
எதிர் கடையில 50 பைசான்னு

போட்டு இருக்கே..?!! "

"
டேய் லூசு.., அது ஜெராக்ஸ் காப்பிடா..!! "

* * * * * * * * * * * * * * * * * *
( கல்யாண மண்டபம்.. )

"
வாங்க., வாங்க..!!

நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?

பொண்ணு வீட்டுக்காரரா..? "

"
ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!"

* * * * * * * * * * * * * * * * * *


அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி

Accident
ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம்

தெரியுதா..?

அவர் : தெரியுது...

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

* * * * * * * * * * * * * *

மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..

அப்பா : Very Good.., பொண்ணுங்க

இப்படிதான் இருக்கணும்..,

எந்த துறையைல சாதிக்க போற..

மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு

பையன் " சாதிக்" -ஐ ...

Sunday, January 23, 2011

இனிமையை ஆட்கொண்டவளே...


எனது சுயசரிதையின் அனைத்துப் பக்கங்களையும் ஆட்கொண்டவளே...

உன்னை சந்தித்த பின் பிறப்பின் இனிமையையும் பிரிந்த பின் சாவின் கொடுமையையும் உணர்த்தியவளே...

உன் கொலுசின் ஓசைதான் எனக்கு சாவு மணியோ...

பூக்கள் வைத்துக் கொள்ளும் வித்தையை நீ எங்கு கற்றாய்...