Wednesday, October 3, 2012

" காக்கைச் சிறகினிலே " - இல் இருந்து...

நான் நிதமும்
வாசிக்கும்

இரண்டு
வரிக் கவிதை...

உன் இதழ்கள்..!



Monday, July 2, 2012

நெஞ்சம் மறப்பதில்லை....


நெஞ்சம் மறப்பதில்லை....


                     இந்த கதை கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு முன்பு
படித்தது. எங்கே படித்தேன் என்று நினைவில் இல்லை. காரணம் இந்தக் கதை இன்னும் மனசை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இப்படியும் கதை எழுத முடியுமா என்று தெரியவில்லை. உங்களின் பகிர்தலுக்கு.

                  அந்தப் பெண் இளம் வயது. ஆனால் கரையான் புற்றுப்போல
அவள் உடல் முழுக்க வறுமை புற்று வைத்திருந்தது. பிச்சை எடுத்து
பிழைப்பவள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். ஒன்று பால்குடிக்கும் குழந்தை.இன்னொன்று அதைவிட 1 வயது பெரியது. ரயிலில் பிரயாணம் செய்து பிச்சை எடுப்பவள்.

                ஒரு நாள் இரவுநேரம் அமாவாசை நேரம் என்று
வைத்துக்கொள்ளலாம். தனது இருகுழந்தைகளுடன் பயணம் செய்கிறர்ள். பசித்த வயிறு. பால் குடிக்கும் குழந்தை பசிக்கு அழுகிறது. பேசாதிருக்கிறாள்.காரணம் பசிக்கிற குழந்தைக்குப் பால் கொடுக்கமுடியாத அளவிற்கு வறுமையான தேகமும் வற்றிய மார்புகளையும் உடையவள். எனவே பசிக்கு அழும் குழந்தை
அழுதுஅழுது ஒரு கட்டத்தில் இறந்துபோய்விடுகிறது. இன்னொரு குழந்தை உறங்கிக்கொண்டிருக்கிறது. இறந்த குழந்தையைக் கிடத்தி சிறிதுநேரம் அழுகிறாள். பின்  ரயில் ஒரு ஆற்றைக் கடக்கையில் இறந்துபோன குழந்தையை ஆற்றில் எறிந்துவிடுகிறாள். ஏன் என்றால் இறந்த குழந்தையைப் புதைப்பதற்கோ எரிப்பதற்கோ இயலாத நிலை.

             ரயில் போய்க்கொண்டிருக்கிறது. நெடுநேரத்திற்குப்பின் ஒரு
ஸ்டேஷனில் நிற்கிறது. இவள் இறங்கவேண்டும் என்று நினைத்து முடிவெடுத்து எழுகிறாள். உறங்கிகொண்டிருக்கும் குழந்தையைத் துர்க்கிக் கொண்டு இறங்கலாம் என்று அதனைத் தொடும்போது அது இறந்துபோயிருக்கிறது.

                பதட்டத்தில் எதை எறிகிறோம் என்று தெரியாமல் இரவு
நேரத்தில்  அவள் ஆற்றில் எறிந்தது உயிருள்ள குழந்தையை.

                  இன்றைக்கும் மறக்கமுடியவில்லை இந்தக் கதையை.

Thursday, June 28, 2012



மொழி பயின்றதென்னவோ
உன் இதழ்கள்தான்
எனினும்
அதிகம் பேசுவதென்னவோ
உன் விழிகளே...!!!



என்னை அழைத்து அழைத்து சிரித்தாள்,
நான் திரும்பி திரும்பி பார்த்தேன்,
ஆனால் எங்கும் அவள் இல்லை ...♥♥♥

சொல் நண்பா ,பைத்தியம் நானா ? அவளா ?

Monday, October 17, 2011

பொன்மொழிகள்...




நேற்று கையில் தலை வைத்து படுத்திருந்தேன் என்பான்.

இன்று இப்பொழுது என செயலாற்றில் இறங்கியவர்களேஎன்றும் எப்பொழுதும் வரலாற்றில் ஏறினார்கள். "


" படிப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களையும்இணைக்கத் தயாராக இருங்கள்.

எந்த சந்தர்ப்பத்திற்காகவும் படிப்பைஇழக்கத் தயாராகி விடாதீர்கள்!எனில், நீங்கள் எங்கிருந்து வந்தாலும்எங்கு வேண்டுமானாலும் போகலாம்”.


" இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.”

- நபிகள் நாயகம்.


"காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள்,சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்,தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி”


"நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே”


ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும்.இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.


"எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்."


"பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட,

முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்."


நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.


முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்..


ரொம்ப விளக்க வேண்டியதில்லை. நண்பர்களென்றால் நம்புவார்கள். எதிரிகளென்றால் எப்படியும் நம்பப்போவதில்லை.


யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.


மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.


பயமில்லாமை தைரியமல்ல. பயநேரங்களிலும் சரியாய் செயல்புரிவதே நிஜமான தைரியம்.


Wednesday, July 20, 2011









கண்ணாடி முன் ஒத்திகை பார்த்தேன்....!

என் வீட்டுக் கண்ணாடிபோதும் போதும் என்றுவாய் விட்டுக் கதறிடும் முன்...,

ஒரு வழியாய்....,ஆனாலும்அரைமனதாய்.....,

ஒத்திகை முடித்தேன்.....!

நடக்கையிலும்....படுக்கையிலும்....,

மீண்டும் மீண்டும்மனதுக்குள்வார்த்தைகளைப்படர விட்டு.....,

அதுவும் போதாதென.....,கனவிலும் தொடர்ந்தேன்....!

இதோ....இப்போது.....,நீ என் எதிரில்.....,எனக்கு அருகில் இருக்கிறாய்.....!




ஆனால்.......வா......ர்.....த்.......தை.....க......ள்.........,சேர்த்து வைத்திருந்தசுவடே இல்லாமல் வெறுமையாய்......!!தேடித் தேடிநானும் சோர்ந்தேன்...,

காணவே இல்லை.....!!செய்வது புரியாமல்....,சொல்லவும் தெரியாமல்..........,

உன் கண்களைப் பார்த்தேன்....!!அய்யய்யோ.....,இது என்ன அதிசயம்.......!?!


எனக்கு இன்பமான அதிர்ச்சியும்தான்....,இது எப்படி சாத்தியம்....?


உன் கண்கள்நான் உன்னோடுஒத்திகையில் பேசிப்பார்த்ததை அப்படியேவார்த்தை மாறாமல் சொல்கிறது.....?

சந்தேகமாய்என்னையே கிள்ளியும் பார்த்தேன்.....கனவு இல்லை.....உண்மைதான்.


சந்தோசத்தில் அணுவெல்லாம் ஆகாயமாய் விரிகிறது....!


உன் இமைகள் கொண்டேஎன் இதயம் தோண்ட....உன்னால் மட்டும் எப்படி முடிகிறது......?


உன் ஒவ்வொருஅசைவுகளிலும்உயிரையே உறிஞ்சும் வித்தையை...,


எங்கேதான் கற்றாயோ.....?


ஒத்திகை பார்த்து வரும்ஒவ்வொரு முறையும்....உன் எதிரில் ஊமையாகிறேன்....!


ஆனால் நீயோ....நம் கண்கள் சந்திக்கும்...ஒரு நொடிப் பொழுதில்ஒருமணிநேர உரையாடலின்விரிவுரையை.....பார்வையிலேயே பேசி விடுகிறாய்....!