Saturday, June 19, 2010

காதல் கவிதை !!!



என் காதல் கவிதைக்கு,
"
கருவாக" அவளை தேர்வுசெய்தேன் ,
ஆனால் , அவளோ ,அதற்கு ,நன்றிகடனாக , அவளின், தாய்மைக்கு "கருவாக" என்னை தேர்வு செய்தாள்...

யார் மிருகம் ? யார் கடவுள் ? என் கவிதை ..

நீ என்னை அவமான படுத்தினாலும் ,
உன் மேலும் நான் அன்பாய் இருப்பேன் ..
நீ என்னை மட்டம் தட்டினாலும் ,
உனக்கும் ,நான் மரியாதை கொடுப்பேன் ...

நீ என்னை கேலி செய்தாலும் ,
உன்னையும் நான் நேசிப்பேன் ..
நீ என்னை தரக்குறைவாக நினைத்தாலும் ,
உன்னையும் நான் ,யாரிடத்தும் உன்னை தரம்தாள்த்தமாட்டேன்..
நீ என்னை ஏமாற்ற நினைத்தாலும் ,
உனக்கும் நான் உண்மை உள்ளவனாக இருப்பேன் ..
நீ எனக்கு எதிராக சூழ்சிகள் செய்தாலும் ,
உனக்கும், நான் பாசகரம் நீட்டுவேன் ..
இவை அனைத்தையும் செய்வதால் ,வாழும் காலத்தில் நீ மிருகமாய் வாழ்ந்து கொண்டிருப்பாய்,
நான் உன்னையும் மன்னித்து கடவுளாய் வாழுந்து கொண்டிருப்பேன் ..

இலங்கை தமிழன் -என் கவிதை



என் சோகம் , அதை மறைக்க முடியவில்லை ,
என் பிரிவு ,அதை தடுக்க முடியவில்லை ,
என் அழுகை , அதை அடக்க முடியவில்லை ,
என் வேதனை , அதை யாரும் புரிந்து கொள்ளவில்லை
என் சுதந்திரம், அதை சுவாசிக்க முடியவில்லை ,
என் இல்லம் ,அதில் வாழ முடியவில்லை ,
என் வயல் , அதில் அறுவடை செய்யமுடியவில்லை ,
என் மக்களின் பிணங்கள் , அது அழுகுவதை, எரிக்க முடியவில்லை,
என் முள் வேலி ,அதை உடைத்தெறிய முடியவில்லை ,
என் பசி , அதை ருசித்து உன்ன முடியவில்லை,
என் ஆடை , அவற்றின் கிழிசலை தைக்க முடியவில்லை,
என் அடிமைவிலங்கு , அதை விலக்கி கொள்ள முடியவில்லை,
என் வேண்டுகோள் , அதை கேட்பதற்கு உலகத்தில் காதுகள் இல்லை,
என் இன பெண்களின் கற்பு , அதற்க்கு உத்திரவாதம் இல்லை ,
இப்படிக்கு ,
இலங்கை தமிழன்

என் சிந்தனை துளிகள்...



நீ ஒருவனுக்கு தீங்கு செய்ய நினைத்தால் , இன்னொருவன் உனக்கு தீங்கு செய்ய காத்திருக்கிறான் ...
நீ ஒருவனுக்கு உதவ நினைத்தால் , இன்னொருவன் உனக்கு உதவ காத்திருக்கிறான் .....
இந்த உலகம் உன்னை ரசிக்கும் நீ அழும்போது ,
இந்த உலகம் உன்னை வெறுக்கும் நீ சிரிக்கும் போது ,
இந்த உலகம் உன்னை நேசிக்கும் நீ உதவும் போது...


Monday, June 14, 2010

வாழ்வில் வெற்றீ பெற - சிந்தனைத்துளிகள்



உன் கடந்த கால சிறு வெற்றி ஒன்று இருக்கும் ,
அதை முயற்சி செய்து பார் ...
கடின உழைப்பு மட்டும் வெற்றி தராது ,
நடிகனை விட , விவசாயின் உழைப்பு அதிகம் ,
ஆனால், யாருக்கு ஊதியம் அதிகம் என்று எண்ணிப்பார்..
மற்றவர்கள் சொல்லும் துறையை தேர்த்துஏடுபதை விட ,
நீ நேசிக்கும் துறை யை ,
தேர்வுசெய் ...
முயற்சி செய்தால் வானமும் உனக்கு கீழே ,
என்ற வாதம் ஒத்து வராது ,
நூறு கோடி மக்களும் ,முயற்சி செய்தால், அம்பானியாக ,மாறமுடியுமா ?,

உன் நண்பர்களை நாடு ,
எவனோ ஒருவன் உனக்கு உதவ காத்திருப்பான் ..
எல்லோர் திறமையும் ,
முடங்கி போக ,
பொருளாதாரமும் ,வறுமைதான் ,
அதை துடைத்து ஏறிய முயற்சி செய் ..

உன் முதல் தோல்வியில் மனம் நோகும் ,
இரண்டாம் தோல்வியில் மனம் உடையும் ,
மூன்றாம் தோல்வியில் மனம் கலங்கும் ,
நான்காம் தோல்வியில் மனம் சுக்குநூறாகும் ,
உன் வெற்றிக்கான தேர்தெடுத்த பாதையை தவறு என்று சுட்டி காட்டுகின்றன அந்த தோல்விகள் ..
தோல்விதான் வெற்றிக்கு முதல் படி ,
என்ற வாதம் தவறானது ,
ஏழை ,இன்று வரை முயற்சிதான் செய்கிறான் ,
ஆயிரத்தில் ஒருவன்தான் வெற்றியும் பெறுகிறான் ..
மறந்துவிடாதே ,இந்த உலகம் ,நீ எது செய்தாலும் , குறை சொல்லத்தான் ,
நிறை சொல்ல அல்ல ...
பிறரிடம் ஆலோசனைகளை கேளுங்கள் ,
அதிகமாக கேட்காதிர்கள் , அவர்களும் உங்களை குழப்பலாம் ..
எது உனக்கு தெரியாது என்று உன்னை பார்த்து ,
ஏளனம் செய்கிறானோ , அதையே நாம் தேர்வு செய்துதான் பார்போமே ?
நம்மை மற்றவர்களோடு ஒப்பிடுவதை விட ,
நம்மை நாமே நேசிப்போம் ...
யென்னவென்டும் ஒவொருவரும் ,
எனக்கு கிடைக்காதது ,
என் மகனுகாவது கிடைக்கவேன்டும் என்ரு ................
ஒருவன் வாழ்கையில் வெற்றீ பெர குடும்ப சுழலும் ஒரு காரனம் ,
சன்டையிடம் பெற்ரோர் ,
குடிகார தகப்பன் ,
கடனில் வீடு ,
கடைசியாக, நல்ல மனம் , எல்லொரிடதும் அன்பு கொன்டால் போதும் ...

ஹைக்கூ கவிதைகள்...

உள்ளேயே இருந்தால் சோம்பல்,
வெளியேறினால் உழைப்பு ,
தொழிலாளியின் வியர்வை........


வெள்ளை காகிதத்தில் ,
கருப்பு புள்ளி ,
புது வீட்டில் திருஷ்டி பொம்மை .....


உயிர் உண்டு , உறுப்புகள் இல்லை,
உறுப்புகள் உண்டு , உயிர் இல்லை ,
இலங்கை தமிழன் ....


தவணை முறையில் ,
புற்று நோய் வாங்கினேன் ,
கடன் தொல்லை ...


கிழியாமல் நெய்தான் ,
கிழிந்த ஆடையோடு ,
நெசவாளி .....



என் இதயத்திற்குள் ,
வானொலி பெட்டி ,
ஒலித்தது, அவள் பெயர் அலைவரிசையாய்............


அன்று ,மகனை அறிமுகபடுத்தியவள் ,
இன்று ,அறிமுகம் இல்லாதோரோடு,
முதியோர் இல்லம் ...

Thursday, April 8, 2010

கடி ....


1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2)
நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3)
காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4)
ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

5)
நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

6)
மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?

7)
ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....

8)
காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

9)
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

10)
நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....

11) True GK Facts:
**
அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
**
ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
**
பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
**
என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....




12)
ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !
அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!

13)
மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

14)
உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1.
சிரிப்பு
2.
அழகு
3.
நல்ல டைப்
4.
கொழந்த மனசு...
5.
இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....

15)
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

16)
முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

17)
தத்துவம் 2010
"
லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"
கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....


18)
அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

19)
எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
Next
மீட் பண்றேன்...

Friday, March 19, 2010

வார்த்தைகளில் என்ன இருக்கு? ஏறுவரிசை - இறங்குவரிசை


அசோகர்
போர்
உயிர்பலி
போதனை
புத்தர்
ஞானம்

புத்தம் சரணம் கச்சாமி

யாழ்ப்பாணம்
சோதனை
ரச பாணம்
மக்கள்
ராஜபக்‌ஷே

புத்தம் ரத்தம் கச்சாமி..!






கருணை
-------------
எளியவர்களுக்கு அன்னதானம்
செய்து கொண்டிருந்தேன்.
வரிசையில் ஒருவன் இடையே புகுந்தான்.
ராஸ்கல் அவனை அடிச்சு விரட்டுங்கடா..!





போதனை
---------------
நான் வேறு உடல் வேறு.
இரண்டும் ஒன்றல்ல.
ஆனால் அடிபட்டால்
எனக்குத்தான் வலிக்கிறது..!



அதிகப்பிரசங்கம்
-------------------------
இன்று மெளனமாய் இருப்பது
எப்படி என வகுப்பு எடுத்தேன்.
அதில் நான் பேசியது
....................................!




முரண் முக்தி
--------------------
இறவாநிலை பற்றி
பிரசங்கம் செய்த யோகி
இதற்கு முன் ஒருமுறை கூட
இறந்ததில்லை.





அவதார புருஷன்
-------------------------
கல்கி அவதாரத்தை
மக்கள் எதிர் நோக்கினார்கள்
வந்ததோ வராகம்...!



நவயுக வேதாந்த விவாதம்
---------------------------------------
அஹம் பிரம்மாஸ்மியை
பிரித்து மெய்ந்தார்
சங்கரானந்தா சரஸ்வதி.

மாண்டூக்கிய உபநிஷத்தை
மடக்கி பிடித்தார்
மந்திராகிரி ஸ்வாமிகள்.

நான் விடுவேனா என் பங்குக்கு
பிரம்மசூத்திரத்தில் சூப் வைத்தேன்.

கடைசியில் அனைவரும்
ஆர்குட்டிலிருந்து வெளியேரினோம்.



ஐங்கரன்
-------------

பிளாஸ்டராப் பாரிசில் இருந்தாலும்
நான் இந்தியாவில் தான் கரைகிறேன்.

அடுத்தவருடம் எனக்கு
சிவப்பு வர்ணம் பூச
ஊர்வலத்தில் சிலர் ரத்தம்
சிந்துகிறார்கள்.

என்னில் கரையாமல்
என்னைகரைத்தென்ன பயன்?



காமன் மேன்
------------------
திரைப்படத்தை பார்த்து
இசம் பற்றி பேசுபவர்கள்...
தங்கள் வீட்டில் ரசம் கூட
வைத்தது இல்லை..!



புல்லின் நுனியில் இருந்த பனித்துளியால்
புல் வளைந்து பூமியை தொடும்
தொலைவில் இருந்தது.

சூரியன் உதித்ததும் பனித்துளி மறைந்தது.
புல் நிமிர்ந்தது.

-------------------------------------------

தற்கொலை செய்யும் நோக்கில்


மரக்கிளையில் கயிற்றில் தொங்கினேன்.
என் பழுதாங்காமல் கிளை முறிய
விழுந்தேன் “பொத்” என...

கிளையில் இருந்த இலை மெதுவாக
காற்றில் அசைந்தவண்ணம் கீழே விழுந்தது.

------------------------------------------------

தினமும் செடிகளுக்கு நீர் ஊற்றினேன்
வளர்ந்தது.

தினமும் என் கால்களில் நீர் ஊற்றினேன்
நான் வளரவில்லை.

--------------------------------------------------

எங்கள் ஊரின் கிழக்கே பெரிய மலை உண்டு.
இருந்தும் சூரிய கிரணங்களை மறைக்க முடியவில்லை.
சூரியன் தினமும் உதிக்கவே செய்கிறது

Tuesday, March 9, 2010

வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!



ஃபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!


என்ன செய்வாங்க.. நம்மாளுங்க வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தா? அவங்க
பண்ற அலப்பரைகளை பத்திதான் ஆராய்ச்சி பண்ணி கீழ எழுதியிருக்கேன்.



  • கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா
இருக்காங்களளளாம்!)

  • வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள
ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி
சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)

  • கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது
தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார்
ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)

  • குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே
அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான்
அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க!)

  • கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல
இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

  • சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே
இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா
குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட
தட்டை எடுங்கப்பா முதல்ல..)

  • எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு 2
திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்"னு ராமானுஜர்
ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது
இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)

  • தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு
சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான்
பார்போம்ங்கறது வேற விசயம்!!)

  • "செளக்கியமா"ன்னு கேக்காம.. "ஹாய்"ன்னு சொல்றது, "லட்ச"த்துக்கு
பதிலா.. "மில்லியன்ல" சொல்றது, தயிருக்கு பதிலா.. "யோகர்டு"ன்னு
சொல்றது, "ஹய்வே"க்கு பதிலா "ஃப்ரீவே"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே
பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர்
பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

  • சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ..
இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ (அ)
பெப்சியோ" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு
சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

  • சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. "தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம்
இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை
கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு
தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)


  • வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல்
பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க..
சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை
சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. சாமீகளா! பணம் டிராவல் பண்றதுக்கு
மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)

  • கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு...

எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான்
சிங்கபூர்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!!

(மேலே உள்ளது பாதி அடியேனும் செய்வேன்னு.. யாராவது போட்டு
குடுக்குறதுக்கு முன்னாடி, நானே ஒத்துகுறேன் மக்களே!!)

Friday, February 26, 2010

எப்பூடி….மொக்கை!




  • மாடுபோலசின்னதாஇருக்கும்! ஆனாஅதுமாடுஇல்ல! அதுஎன்ன?

தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

  • தண்ணிலஇருந்துஏன்மின்சாரம்எடுக்கிறார்கள்?

அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

  • தினமும்உன்மனைவிக்குபூவாங்கிட்டுப்போறியே.. அவ்வளவுபாசமாமனைவிமேல?

மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

  • டீச்சர்: மகாகவிபாரதிதெரியுமா?

சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!

  • யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?

கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!

  • இன்பத்திலும்சிரிங்க!துன்பத்திலும்சிரிங்க! எல்லாநேரமும்சிரிங்க! அப்பத்தான்நீங்க

லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

  • ஏன்பாட்டிஎன்மேலஇவ்வளவுபாசமாஇருக்க?

நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே
கொள்ளி வச்சுரவா?

  • பஸ்ரூட்லபஸ்போகும், ட்ரைன்ரூட்லட்ரைன்போகும்! பீட்ரூட்லஎன்னபோகும்?

தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!

  • அம்மா! எதிர்வீட்லஇருக்குறஆண்டிபேருஎன்னமா?

சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?

  • பல்ப் - எடிசன்

ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

  • மூணுபேருஒருபைக்லபோயிட்டுஇருக்காங்க!அப்பஒருடிராபிக்போலீஸ்கை

காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?

  • டாக்டர்: உங்கஉடம்பகுறைக்கதினமும்நான்குமைல்நடக்கணும்!

பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!

  • ஹலோ! என்னதான்கம்ப்யூட்டர்விண்டோவ்லாஉலகமேதெரிஞ்சாலும்எதிர்வீட்டு

பொண்ணு தெரியுமா?
------ பில் கேட்ஸ் விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.

  • அப்பா: ஏண்டாஉங்கஸ்கூல்லரன்னிங்ரேஸ்இருக்குன்னுசொன்னியே, என்னாச்சி?

மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
ஓடி போய்டாங்க!!

  • கொடூரமொக்கை!

என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'
வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!!

எப்பூடி….