Monday, February 8, 2010
" படித்ததில் பிடித்த தத்துவங்கள் & நகைச்சுவைகள் "
நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
=========================
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
=========================
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
=========================
நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. - பில் கேட்ஸ்
=========================
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!
=========================
மேலாளர்: உன் தகுதி என்ன?
சர்தார்: நான் Ph.D
மேலாளர்: Ph.Dன்னா என்ன?
சர்தார்: Passed high school with Difficulty.
=========================
நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.
அங்கே 5பேரும்மா.
மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.
திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டு
மச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.
ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.
சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.
அங்கே 8 பேரும்மா.
அவங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு கேள்வி கேட்டாங்க.
நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?
அதுல ஒருத்தன் சொன்னான்
இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டா
இவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.
=========================
(தேர்வு அறையில்)
ஆசிரியர்: டேய் என்னடா... கையில் ஃபார்முலா எழுதியிருக்கே?
மாணவன்: எங்க கணக்கு வாத்தியார்தான் ஃபார்முலா எல்லாம் விரல்
நுனியில்இருக்கணும்னு சொன்னார்.
=========================
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
=========================
அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை
மட்டும்கேளுங்கள்.
ஏன்னா அறிவு......
சரி விடு. இல்லாததைப் பத்திப் பேச வேண்டாம்.
==========
*சிந்தனை துளிகளை பகிர்வோம் !*
1.நீரோடைக்கும் பாறைக்கும் இடையே நடக்கும்
இடைவிடாத போராட்டத்தின் இறுதியில்
நீரோடை வெற்றி பெறுகிறது
தனது பலத்தினால் அல்ல, தொடர் முயற்சியினால்
2.ஒரு நாள் ஆத்திரம்.. பல நாள் துக்கத்தை தரும்...
3.வீழ்வதில் வெட்கப் படாதே! வீழ்ந்து எழுவதில் தான் வெற்றி காண்பாய்!
4.நாம் எடுத்துக்கொள்வதுதான் வாழ்க்கை. எப்போதும் அது அபபடித்தான் இருந்தது,
இருக்கும். வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சி தராது. அதை மகிழ்ச்சியா வைத்துருக்க
நாமும் விரும்ப வேண்டும். வாழ்க்கை உனக்கு நேரமும் இடமும் மட்டும் தரும்.
நிரப்ப வேண்டியது உன் சாமர்த்தியம்
5.படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.
6.மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
7.உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.
8.வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.
9.பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.
10.ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
11.எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
12.மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.
13.கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.
14.அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
15.கவனியுங்கள்உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள்அவைகளே வார்த்தைகளாக
வருகின்றன்.உங்கள் வார்த்தைகளை கவனியுங்கள்அவைகளே செயல்களாக ஆகின்றன.உங்கள்
செயல்களைக் கவனியுங்கள்அவைகளே பழக்கமாகின்றன.உங்கள் பழக்கங்களைக்
கவனியுங்கள்அவைகளே உங்கள் நடத்தையாகின்றனஉங்கள் நடத்தையைக் கவனியுங்கள்அவைகளே
உங்களுடய எதிர்காலத்தை நிச்சயிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment