Thursday, October 24, 2013
Wednesday, October 3, 2012
Monday, July 2, 2012
நெஞ்சம் மறப்பதில்லை....
நெஞ்சம் மறப்பதில்லை....
இந்த கதை கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு முன்பு
படித்தது. எங்கே படித்தேன் என்று நினைவில் இல்லை. காரணம் இந்தக் கதை இன்னும் மனசை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இப்படியும் கதை எழுத முடியுமா என்று தெரியவில்லை. உங்களின் பகிர்தலுக்கு.
அந்தப் பெண் இளம் வயது. ஆனால் கரையான் புற்றுப்போல
அவள் உடல் முழுக்க வறுமை புற்று வைத்திருந்தது. பிச்சை எடுத்து
பிழைப்பவள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். ஒன்று பால்குடிக்கும் குழந்தை.இன்னொன்று அதைவிட 1 வயது பெரியது. ரயிலில் பிரயாணம் செய்து பிச்சை எடுப்பவள்.
ஒரு நாள் இரவுநேரம் அமாவாசை நேரம் என்று
வைத்துக்கொள்ளலாம். தனது இருகுழந்தைகளுடன் பயணம் செய்கிறர்ள். பசித்த வயிறு. பால் குடிக்கும் குழந்தை பசிக்கு அழுகிறது. பேசாதிருக்கிறாள்.காரணம் பசிக்கிற குழந்தைக்குப் பால் கொடுக்கமுடியாத அளவிற்கு வறுமையான தேகமும் வற்றிய மார்புகளையும் உடையவள். எனவே பசிக்கு அழும் குழந்தை
அழுதுஅழுது ஒரு கட்டத்தில் இறந்துபோய்விடுகிறது. இன்னொரு குழந்தை உறங்கிக்கொண்டிருக்கிறது. இறந்த குழந்தையைக் கிடத்தி சிறிதுநேரம் அழுகிறாள். பின் ரயில் ஒரு ஆற்றைக் கடக்கையில் இறந்துபோன குழந்தையை ஆற்றில் எறிந்துவிடுகிறாள். ஏன் என்றால் இறந்த குழந்தையைப் புதைப்பதற்கோ எரிப்பதற்கோ இயலாத நிலை.
ரயில் போய்க்கொண்டிருக்கிறது. நெடுநேரத்திற்குப்பின் ஒரு
ஸ்டேஷனில் நிற்கிறது. இவள் இறங்கவேண்டும் என்று நினைத்து முடிவெடுத்து எழுகிறாள். உறங்கிகொண்டிருக்கும் குழந்தையைத் துர்க்கிக் கொண்டு இறங்கலாம் என்று அதனைத் தொடும்போது அது இறந்துபோயிருக்கிறது.
பதட்டத்தில் எதை எறிகிறோம் என்று தெரியாமல் இரவு
நேரத்தில் அவள் ஆற்றில் எறிந்தது உயிருள்ள குழந்தையை.
இன்றைக்கும் மறக்கமுடியவில்லை இந்தக் கதையை.
Monday, October 17, 2011
பொன்மொழிகள்...

Wednesday, July 20, 2011

Wednesday, June 1, 2011
பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை

எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம் உழுந்து வடையில் ஓட்டை இருக்கு ஆனால் பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் என்று? அதுக்குக் காரணம் என்ன என்று மல்லாக்கப்படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்தபடி யோசிக்க ஆரம்பிச்சு அப்பிடியே தூங்கிப்போனேன். அப்போ கனவிலே விருந்தூர் மன்னர் சோத்துச்சக்கரவர்த்தியின்அமைச்சர் பருப்பு தோன்றி அதன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.
"முன்னொரு காலத்தில விருந்தூர் என்ற நாட்டை சோத்துச்சக்கரவர்த்தி என்ற ராஜா ஆட்சி செய்து வந்தார். அவரின் ஆட்சியின் கீழ் உழுந்தூர், பருப்பூர் என்று இரண்டு ஊர்கள் இருந்திச்சாம். அந்த ரெண்டு ஊர்க்காரர்களும் பாயாசூர், கடலையூர்க்காரர்கள் எல்லாரும் மூக்குமேல விரலை வைக்கிற அளவுக்கு ஒற்றுமையா, ரொம்ப சந்தோஷமா மற்ற இருந்து வந்தாங்களாம். தங்களுக்குள்ள போட்டி பொறாமையே வரக்கூடாது எண்டதுக்காக எந்தப்போட்டியா இருந்தாலும் இரண்டு ஊரும் சமமாவே மார்க் வாங்கிறதெண்டு முடிவெடுத்து, அதையே கடைப்பிடிச்சு வந்தாங்களாம்.
ஒருநாள் விருந்தூர் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு போட்டி ஒன்று வைக்கப்பொவதாக அறிவிச்சாங்களாம். அதாவது மன்னரின் பிறந்தநாளுக்குயார் சிறந்த தின்பண்டம் செய்து கொண்டு வந்து தாறாங்களோ, அவங்களுக்கு "ஆண்டின் சிறந்த தின்பண்டி" என்ற பட்டம் குடுப்பதாக சொன்னாங்களாம்.
போட்டிதினத்தன்று அனைவரும் மைதானத்தில் கூடியிருந்தாங்களாம். அப்ப போட்டி ஆரம்பிச்சது. உழுந்தூர்க்காரர்களும், பருப்பூர்க்காரர்களும் மும்முரமாப் போட்டியில் கலந்து தங்கள் தின்பண்டங்களைச் தயாரிக்க ஆரம்பிச்சாங்களாம். முதலில் செய்து முடிக்கிறவங்களுக்கு போனஸ் பொயின்ஸ் கிடைக்கும் என்று தீடீரென மன்னர் அறிவிக்க, உடனடியா உழுந்தூர்க்காரர்கள், "எனக்குத்தான்.. எனக்குத்தான்.. இந்தாங்க உழுந்து வடை" என்று சத்தமாச் சொல்லிட்டு உழுந்துவடையை எடுத்திட்டு மன்னரிடம் போனாங்களாம்.
உடனே சாக்கான பருப்பூர்க்காரனுகள், என்னடா இது என்று பார்க்க, வழக்கம்போல ஒரே மாதிரி வடை சுட்டு இரண்டு பேரும் பரிசைப் பகிர்ந்துக்கலாம் என்ற கொள்ளையை மீறி உழுந்தார்க்காரனுகள் கிரியேட்டிவிட்டியாக யோசிச்சு உழுந்து வடையில் ஓட்டை போட்டு அதன் தொடு மேற்பரப்பைக் கூட்டி சீக்கிரமா வடையைப் பொரிய வச்சு ஜெயித்து தூரோகம் செய்ததால், அன்றிலிருந்து உழுந்தூர்க்காரனுகளை எதிர்க்கும் நோக்கில் பருப்புவடையில் ஓட்டை போடுவதில்லையாம்"
என்று அமைச்சர் பருப்பு சொல்லிமுடிக்க, எங்கேயோ கருகிற வாசனை வர திடுக்கிட்டு எழுந்து பார்த்தா அடுப்பில் ஆசைஆசையாய் உழுந்து வடை சுட்டுச் சாப்பிடலாம் என்ற எனது நினைப்பில் பாழாய்ப்போன அடுப்பு அதிகமாய் எரிந்து வடையை கருக்கி எனது வயிற்றில் மண்ணைப் போட்டிருந்தது.
"ஐயோ வடபோச்சே...."
காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்
ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, ''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி
என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது. ''என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.
ஞானி, ''எங்கே உன்னைக் கவர்ந்த
உயரமான செடி? ''என்று கேட்டார்.
சீடன் சொன்னான், 'குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன்.
இன்னும் உயரமான ரோஜாச் செடிகள்
தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான
ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.
' புன்முறுவலோடு ஞானி சொன்னார்,''இது தான் காதல்.''
பின்னர் ஞானி,''சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.''
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார்,''இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய
காந்திச் செடியா? ''சீடன் சொன்னான், 'இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை
விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன்.
நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகுஇதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.'
இப்போது ஞானி சொன்னார், ''இது தான் திருமணம்.''.......
Tuesday, May 10, 2011
Tuesday, April 19, 2011
புனிதமானது...

உலகத்திலேயே மோசமானது உன்னால் யாராவது கண்ணீர் சிந்துவது!உலகத்திலேயே ரொம்ப புனிதமானது உனக்காக யாராவது கண்ணீர் சிந்துவது!!
~~~~~~~~~~
தண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய்!ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே!!
~~~~~~~~~~
உன்னை பலவீனப்படுத்தும் எந்த ஒரு விடயதிலிருன்தும்விலகியே இரு!!
~~~~~~~~~~
உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலைப்படாதே! நீ அவர்களுக்கு இரண்டு அடிக்கு முன்னால் இருக்கிறாய் என்று பெருமைப்படு!!
~~~~~~~~~~
தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!
~~~~~~~~~~
நீங்கள் இந்தப் பூமியில் பிறந்ததன் அர்த்தம் பூர்த்தியாக வேண்டுமென்றால், அடுத்தவருக்கு உதவி செய்ய முடியாவிட்டால் கூட பரவாயில்லை! யாரையும் புண்படுத்திவிடாதீர்கள்....!!
~~~~~~~~~~
தோல்விகளை நேசிக்கத் தெரிந்துகொள்!வெற்றியின் இரகசியம் உனக்கு புரியும் !!
~~~~~~~~~~
உலகில் வாழ வேண்டும். சாகும் வரை அல்ல.நம்மை வெறுத்தவர்கள் நம்மை வாழ்த்தும் வரை...!!!
~~~~~~~~~~
வெற்றி என்பது உன்நிழல் போல,நீ அதை தேடி போகவேண்டியதில்லை,நீ வெளிச்சத்தை நோக்கிநடக்கும் போது தானேஉன்னுடன் வரும்...
~~~~~~~~~~
Thursday, April 7, 2011
ஏய் ஓவியப் பெண்ணே !!!!
மனதில் நிறைந்த உருவம் இங்கு உயிரில்லா ஓவியமாய்...என்னில் நிறைந்த காதல் உயிர் கொண்ட காவியமாய் ...... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஏய் ஓவியப் பெண்ணே !நீ என் கரம் பிடித்து காவியம் ஆவது எப்போதுபதில் தெரிந்தால் சொல்லடி உனக்கான என் தேடலை ...... நான் முடித்து கொள்கிறேன் ..... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Monday, April 4, 2011
Thursday, March 31, 2011
Sunday, March 27, 2011
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை !!!
Friday, March 25, 2011
Thursday, March 17, 2011
காலப் பணம்
Wednesday, March 2, 2011
Tuesday, February 1, 2011
காதல் ....

நிழல் கூட வெளிச்சம் உள்ள வரை தான் துணைக்கு வரும் - ஆனால்
உண்மையான அன்பு .. உயிர் உள்ள வரை துணைக்கு வரும் .. உன்னை போல் ...
என் தனிமையே
உன் பிரிவை
அடிக்கடி
ஞாபகப்படுத்துகிறது...
காதல் திரைப்படமா
பார்த்து வாங்கி வா
என்றார்கள் வீட்டில்
நான் காதலையே
...வாங்கி வந்தேன்
விரட்டிவிட்டார்கள்
வீதியில்
உன் காதல்
குழந்தையை
கலைக்க
வைத்தியர்
...தேவையில்லை
உன் குடும்ப
உறுப்பினர்
ஒருவர் போதும்...
நீ
கொலை செய்த
கைதி என்றால்கூட
உன் விடுதலை
...அன்றாவது
யாரையாவது
எதிர்பார்க்கலாம்
நீ
காதல் செய்தால்
எதிர்பாரமல் கூட
உன் சாவுக்கு
சொந்தம் வராது...
சேற்றில்
விழுந்தாலும்
காதலில்
விழுந்திடாதே
...
உன் வீட்டில்
எல்லோரும்
தலை முழுக
வேண்டிவரும்...
திருமணம் மரணம் இந்த இரண்டிலும் மனம் தான் ஒன்று சேர்க்கிறது...
என் காதல் இயற்க்கைக்கு புறம்பானது ஏன் தெரியுமா? மரணமே இல்லை என்பதால்.....
காதலுக்கு இதயம் இருப்பது உண்மை தான் ஆனால் என் காதல் இதயத்துக்குள் அல்லவே இருக்கின்றது...
மீண்டும் ஒருமுறை என் முன் வந்துவிடாதே.....
ஒருவேளை மறுபடியும் உன்னை காதலித்தாலும் காதலித்து விடும் என் பாழாய்ப்போன மனது.........
நேற்றைய என்னை இன்றைய நான் வெல்லத் துடிக்கிறேன்… நாளைய என்னிடம் இன்றைய நான் தோற்கப்போவது தெரிந்திருந்தும்......
மனதினுள் நீயும் உயிருக்குள் உன் நினைவும் உன் உணர்வுகளுடன் என் உணர்வும் இருக்கும் போது உன்னை மறப்பது சாத்தியமா? சாதனைதான்!!! சிரிக்க மட்டுமே தெரிந்த என் இதயத்திற்கு தவிக்கவும் கற்று கொடுத்து விட்டாயே......
எனக்குத் தெரியாத
வார்த்தைகளால்தான்
என்னுள்
உனக்கான கவிதை
உறங்கிக் கொண்டிருக்கிறது...
நீ
என் காதலை
மறுத்ததுக்கு
பதிலாய்
என்னை
கொண்றிருந்தால்
என்
பிணத்தை
நானே
சுமக்க வேண்டி
வந்திருக்காது...
திருடியவன் தான்
சிறையில் இருப்பான் என்று?
என் இதயத்தைத் திருடியவள்;
இன்று மாற்றான் மனைவி
நானோ தனிமைச் சிறையில்!!






























