Monday, October 17, 2011

பொன்மொழிகள்...




நேற்று கையில் தலை வைத்து படுத்திருந்தேன் என்பான்.

இன்று இப்பொழுது என செயலாற்றில் இறங்கியவர்களேஎன்றும் எப்பொழுதும் வரலாற்றில் ஏறினார்கள். "


" படிப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களையும்இணைக்கத் தயாராக இருங்கள்.

எந்த சந்தர்ப்பத்திற்காகவும் படிப்பைஇழக்கத் தயாராகி விடாதீர்கள்!எனில், நீங்கள் எங்கிருந்து வந்தாலும்எங்கு வேண்டுமானாலும் போகலாம்”.


" இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.”

- நபிகள் நாயகம்.


"காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள்,சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்,தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி”


"நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே”


ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும்.இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.


"எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்."


"பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட,

முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்."


நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.


முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்..


ரொம்ப விளக்க வேண்டியதில்லை. நண்பர்களென்றால் நம்புவார்கள். எதிரிகளென்றால் எப்படியும் நம்பப்போவதில்லை.


யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.


மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.


பயமில்லாமை தைரியமல்ல. பயநேரங்களிலும் சரியாய் செயல்புரிவதே நிஜமான தைரியம்.


Wednesday, July 20, 2011









கண்ணாடி முன் ஒத்திகை பார்த்தேன்....!

என் வீட்டுக் கண்ணாடிபோதும் போதும் என்றுவாய் விட்டுக் கதறிடும் முன்...,

ஒரு வழியாய்....,ஆனாலும்அரைமனதாய்.....,

ஒத்திகை முடித்தேன்.....!

நடக்கையிலும்....படுக்கையிலும்....,

மீண்டும் மீண்டும்மனதுக்குள்வார்த்தைகளைப்படர விட்டு.....,

அதுவும் போதாதென.....,கனவிலும் தொடர்ந்தேன்....!

இதோ....இப்போது.....,நீ என் எதிரில்.....,எனக்கு அருகில் இருக்கிறாய்.....!




ஆனால்.......வா......ர்.....த்.......தை.....க......ள்.........,சேர்த்து வைத்திருந்தசுவடே இல்லாமல் வெறுமையாய்......!!தேடித் தேடிநானும் சோர்ந்தேன்...,

காணவே இல்லை.....!!செய்வது புரியாமல்....,சொல்லவும் தெரியாமல்..........,

உன் கண்களைப் பார்த்தேன்....!!அய்யய்யோ.....,இது என்ன அதிசயம்.......!?!


எனக்கு இன்பமான அதிர்ச்சியும்தான்....,இது எப்படி சாத்தியம்....?


உன் கண்கள்நான் உன்னோடுஒத்திகையில் பேசிப்பார்த்ததை அப்படியேவார்த்தை மாறாமல் சொல்கிறது.....?

சந்தேகமாய்என்னையே கிள்ளியும் பார்த்தேன்.....கனவு இல்லை.....உண்மைதான்.


சந்தோசத்தில் அணுவெல்லாம் ஆகாயமாய் விரிகிறது....!


உன் இமைகள் கொண்டேஎன் இதயம் தோண்ட....உன்னால் மட்டும் எப்படி முடிகிறது......?


உன் ஒவ்வொருஅசைவுகளிலும்உயிரையே உறிஞ்சும் வித்தையை...,


எங்கேதான் கற்றாயோ.....?


ஒத்திகை பார்த்து வரும்ஒவ்வொரு முறையும்....உன் எதிரில் ஊமையாகிறேன்....!


ஆனால் நீயோ....நம் கண்கள் சந்திக்கும்...ஒரு நொடிப் பொழுதில்ஒருமணிநேர உரையாடலின்விரிவுரையை.....பார்வையிலேயே பேசி விடுகிறாய்....!





Wednesday, June 1, 2011

பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை



எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம் உழுந்து வடையில் ஓட்டை இருக்கு ஆனால் பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் என்று? அதுக்குக் காரணம் என்ன என்று மல்லாக்கப்படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்தபடி யோசிக்க ஆரம்பிச்சு அப்பிடியே தூங்கிப்போனேன். அப்போ கனவிலே விருந்தூர் மன்னர் சோத்துச்சக்கரவர்த்தியின்அமைச்சர் பருப்பு தோன்றி அதன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.

"முன்னொரு காலத்தில விருந்தூர் என்ற நாட்டை சோத்துச்சக்கரவர்த்தி என்ற ராஜா ஆட்சி செய்து வந்தார். அவரின் ஆட்சியின் கீழ் உழுந்தூர், பருப்பூர் என்று இரண்டு ஊர்கள் இருந்திச்சாம். அந்த ரெண்டு ஊர்க்காரர்களும் பாயாசூர், கடலையூர்க்காரர்கள் எல்லாரும் மூக்குமேல விரலை வைக்கிற அளவுக்கு ஒற்றுமையா, ரொம்ப சந்தோஷமா மற்ற இருந்து வந்தாங்களாம். தங்களுக்குள்ள போட்டி பொறாமையே வரக்கூடாது எண்டதுக்காக எந்தப்போட்டியா இருந்தாலும் இரண்டு ஊரும் சமமாவே மார்க் வாங்கிறதெண்டு முடிவெடுத்து, அதையே கடைப்பிடிச்சு வந்தாங்களாம்.

ஒருநாள் விருந்தூர் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு போட்டி ஒன்று வைக்கப்பொவதாக அறிவிச்சாங்களாம். அதாவது மன்னரின் பிறந்தநாளுக்குயார் சிறந்த தின்பண்டம் செய்து கொண்டு வந்து தாறாங்களோ, அவங்களுக்கு "ஆண்டின் சிறந்த தின்பண்டி" என்ற பட்டம் குடுப்பதாக சொன்னாங்களாம்.

போட்டிதினத்தன்று அனைவரும் மைதானத்தில் கூடியிருந்தாங்களாம். அப்ப போட்டி ஆரம்பிச்சது. உழுந்தூர்க்காரர்களும், பருப்பூர்க்காரர்களும் மும்முரமாப் போட்டியில் கலந்து தங்கள் தின்பண்டங்களைச் தயாரிக்க ஆரம்பிச்சாங்களாம். முதலில் செய்து முடிக்கிறவங்களுக்கு போனஸ் பொயின்ஸ் கிடைக்கும் என்று தீடீரென மன்னர் அறிவிக்க, உடனடியா உழுந்தூர்க்காரர்கள், "எனக்குத்தான்.. எனக்குத்தான்.. இந்தாங்க உழுந்து வடை" என்று சத்தமாச் சொல்லிட்டு உழுந்துவடையை எடுத்திட்டு மன்னரிடம் போனாங்களாம்.

உடனே சாக்கான பருப்பூர்க்காரனுகள், என்னடா இது என்று பார்க்க, வழக்கம்போல ஒரே மாதிரி வடை சுட்டு இரண்டு பேரும் பரிசைப் பகிர்ந்துக்கலாம் என்ற கொள்ளையை மீறி உழுந்தார்க்காரனுகள் கிரியேட்டிவிட்டியாக யோசிச்சு உழுந்து வடையில் ஓட்டை போட்டு அதன் தொடு மேற்பரப்பைக் கூட்டி சீக்கிரமா வடையைப் பொரிய வச்சு ஜெயித்து தூரோகம் செய்ததால், அன்றிலிருந்து உழுந்தூர்க்காரனுகளை எதிர்க்கும் நோக்கில் பருப்புவடையில் ஓட்டை போடுவதில்லையாம்"


என்று அமைச்சர் பருப்பு சொல்லிமுடிக்க, எங்கேயோ கருகிற வாசனை வர திடுக்கிட்டு எழுந்து பார்த்தா அடுப்பில் ஆசைஆசையாய் உழுந்து வடை சுட்டுச் சாப்பிடலாம் என்ற எனது நினைப்பில் பாழாய்ப்போன அடுப்பு அதிகமாய் எரிந்து வடையை கருக்கி எனது வயிற்றில் மண்ணைப் போட்டிருந்தது.

"ஐயோ வடபோச்சே...."

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்



காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்

ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, ''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி
என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது. ''என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.

ஞானி, ''எங்கே உன்னைக் கவர்ந்த
உயரமான செடி? ''என்று கேட்டார்.

சீடன் சொன்னான், 'குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன்.

இன்னும் உயரமான ரோஜாச் செடிகள்
தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான
ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.

' புன்முறுவலோடு ஞானி சொன்னார்,''இது தான் காதல்.''

பின்னர் ஞானி,''சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.''

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார்,''இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய
காந்திச் செடியா? ''சீடன் சொன்னான், 'இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை
விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன்.

நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகுஇதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.'

இப்போது ஞானி சொன்னார், ''இது தான் திருமணம்.''.......

Tuesday, April 19, 2011

புனிதமானது...





உலகத்திலேயே மோசமானது உன்னால் யாராவது கண்ணீர் சிந்துவது!உலகத்திலேயே ரொம்ப புனிதமானது உனக்காக யாராவது கண்ணீர் சிந்துவது!!


~~~~~~~~~~


தண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய்!ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே!!


~~~~~~~~~~


உன்னை பலவீனப்படுத்தும் எந்த ஒரு விடயதிலிருன்தும்விலகியே இரு!!


~~~~~~~~~~


உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலைப்படாதே! நீ அவர்களுக்கு இரண்டு அடிக்கு முன்னால் இருக்கிறாய் என்று பெருமைப்படு!!


~~~~~~~~~~


தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!


~~~~~~~~~~


நீங்கள் இந்தப் பூமியில் பிறந்ததன் அர்த்தம் பூர்த்தியாக வேண்டுமென்றால், அடுத்தவருக்கு உதவி செய்ய முடியாவிட்டால் கூட பரவாயில்லை! யாரையும் புண்படுத்திவிடாதீர்கள்....!!


~~~~~~~~~~


தோல்விகளை நேசிக்கத் தெரிந்துகொள்!வெற்றியின் இரகசியம் உனக்கு புரியும் !!


~~~~~~~~~~


உலகில் வாழ வேண்டும். சாகும் வரை அல்ல.நம்மை வெறுத்தவர்கள் நம்மை வாழ்த்தும் வரை...!!!


~~~~~~~~~~


வெற்றி என்பது உன்நிழல் போல,நீ அதை தேடி போகவேண்டியதில்லை,நீ வெளிச்சத்தை நோக்கிநடக்கும் போது தானேஉன்னுடன் வரும்...


~~~~~~~~~~


Thursday, April 7, 2011

ஏய் ஓவியப் பெண்ணே !!!!

மனதில் நிறைந்த உருவம் இங்கு உயிரில்லா ஓவியமாய்...என்னில் நிறைந்த காதல் உயிர் கொண்ட காவியமாய் ...... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஏய் ஓவியப் பெண்ணே !நீ என் கரம் பிடித்து காவியம் ஆவது எப்போதுபதில் தெரிந்தால் சொல்லடி உனக்கான என் தேடலை ...... நான் முடித்து கொள்கிறேன் ..... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~