Sunday, January 23, 2011

இனிமையை ஆட்கொண்டவளே...


எனது சுயசரிதையின் அனைத்துப் பக்கங்களையும் ஆட்கொண்டவளே...

உன்னை சந்தித்த பின் பிறப்பின் இனிமையையும் பிரிந்த பின் சாவின் கொடுமையையும் உணர்த்தியவளே...

உன் கொலுசின் ஓசைதான் எனக்கு சாவு மணியோ...

பூக்கள் வைத்துக் கொள்ளும் வித்தையை நீ எங்கு கற்றாய்...

Saturday, June 19, 2010

காதல் கவிதை !!!



என் காதல் கவிதைக்கு,
"
கருவாக" அவளை தேர்வுசெய்தேன் ,
ஆனால் , அவளோ ,அதற்கு ,நன்றிகடனாக , அவளின், தாய்மைக்கு "கருவாக" என்னை தேர்வு செய்தாள்...

யார் மிருகம் ? யார் கடவுள் ? என் கவிதை ..

நீ என்னை அவமான படுத்தினாலும் ,
உன் மேலும் நான் அன்பாய் இருப்பேன் ..
நீ என்னை மட்டம் தட்டினாலும் ,
உனக்கும் ,நான் மரியாதை கொடுப்பேன் ...

நீ என்னை கேலி செய்தாலும் ,
உன்னையும் நான் நேசிப்பேன் ..
நீ என்னை தரக்குறைவாக நினைத்தாலும் ,
உன்னையும் நான் ,யாரிடத்தும் உன்னை தரம்தாள்த்தமாட்டேன்..
நீ என்னை ஏமாற்ற நினைத்தாலும் ,
உனக்கும் நான் உண்மை உள்ளவனாக இருப்பேன் ..
நீ எனக்கு எதிராக சூழ்சிகள் செய்தாலும் ,
உனக்கும், நான் பாசகரம் நீட்டுவேன் ..
இவை அனைத்தையும் செய்வதால் ,வாழும் காலத்தில் நீ மிருகமாய் வாழ்ந்து கொண்டிருப்பாய்,
நான் உன்னையும் மன்னித்து கடவுளாய் வாழுந்து கொண்டிருப்பேன் ..

இலங்கை தமிழன் -என் கவிதை



என் சோகம் , அதை மறைக்க முடியவில்லை ,
என் பிரிவு ,அதை தடுக்க முடியவில்லை ,
என் அழுகை , அதை அடக்க முடியவில்லை ,
என் வேதனை , அதை யாரும் புரிந்து கொள்ளவில்லை
என் சுதந்திரம், அதை சுவாசிக்க முடியவில்லை ,
என் இல்லம் ,அதில் வாழ முடியவில்லை ,
என் வயல் , அதில் அறுவடை செய்யமுடியவில்லை ,
என் மக்களின் பிணங்கள் , அது அழுகுவதை, எரிக்க முடியவில்லை,
என் முள் வேலி ,அதை உடைத்தெறிய முடியவில்லை ,
என் பசி , அதை ருசித்து உன்ன முடியவில்லை,
என் ஆடை , அவற்றின் கிழிசலை தைக்க முடியவில்லை,
என் அடிமைவிலங்கு , அதை விலக்கி கொள்ள முடியவில்லை,
என் வேண்டுகோள் , அதை கேட்பதற்கு உலகத்தில் காதுகள் இல்லை,
என் இன பெண்களின் கற்பு , அதற்க்கு உத்திரவாதம் இல்லை ,
இப்படிக்கு ,
இலங்கை தமிழன்